மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
ஜனாதிபதியினால் இவ்வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட காலமாக சுகயீனமுற்ற முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மூத்த பிரஜைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து இன்று குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மன்னார் நகர், முசலி, நானாட்டான், மடு, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முற்பதிவு மேற்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகளின் முதல் டோஸ் வீடுகளுக்கே சென்று செலுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக இவ்வாரம் முழுவதும் மூத்த பிரஜைகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







