சிறைச்சாலையின் பணி பிரிவிற்கு மாற்றப்பட்ட ஹிருணிகா
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலையின் பணி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவரை ஹிருணிகா பிரேமச்சந்திர, காரில் கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சிறை தண்டனை
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலையின் பணிப்பிரிவில் அவரது பணிகள் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
