தலவாக்கலையில் 4 சிறுவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்
தலவாக்கலை( Talawakela) - கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.07.2024) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இதன்போது, முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
உதவி கோரியுள்ள பொலிஸார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர்களால் நேற்று (15) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர்கள் உதவி கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 15 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
