அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, பொதுக் கல்விக்கு அழகியல் பாடங்கள் அத்தியாவசியமானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையிலும் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியில் அழகியல் பாடங்களை கற்க முடியும்.
கல்வி முறை
அதன்படி, க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளிலும் அழகியல் பாடங்களுக்கான பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, உயர்கல்வியில் அழகியல் பாடங்களும் அதே முறையில் இருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அழகியல் பாடங்கள் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் மற்றும் அனுமானங்களை இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
