டென்மார்க்கில் கோவிலுக்குள் திருகோணமலை அர்ச்சகருக்கு நேர்ந்த கதி

Trincomalee Sri Lanka Switzerland Denmark Tamil
By Harrish May 16, 2024 07:05 PM GMT
Report

டென்மார்க்கில் (Denmark) அமைந்துள்ள இந்து ஆலயத்திற்குள் இந்து அர்ச்சகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (14.05.2024) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ் அர்ச்சகர் சிவத்திரு. தம்பிரான் சுவாமிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்

பொலிஸ் விசாரணை

டென்மார்க்கில் அமைந்துள்ள வேல்முருகன் திருக்கோவில் அறங்காவல்சபை நிர்வாகம் சுவிட்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்துள்ள தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்றமான சைவ நெறிக்கூடத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைவாக கடந்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி தமிழில் மீள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழ் வழிபாட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்த நிலையில், குடியுரிமை (ஜனநாயக) முறையில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு, அடியவர்களின் ஆணையுடன் தற்போது தமிழ் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், நேற்று முன்தினம்(14) நள்ளிரவு வேல்முருகன் திருக்கோவிலுக்குள் கதவை உடைத்து நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களால் செந்தமிழ் அர்ச்சகர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக வேல்முருகன் திருக்கோவில் நிர்வாகம் டென்மார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பல தடயங்களையும் விட்டுச்சென்றுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டென்மார்க்கில் கோவிலுக்குள் திருகோணமலை அர்ச்சகருக்கு நேர்ந்த கதி | Hindu Priest Attacked Inside Temple In Denmark

கண்டன அறிக்கை

இந்த தாக்குதலை சைவநெறிக்கூடமும், பொது அமைப்புக்களும் கண்டித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

டென்மார்க்கில் கோவிலுக்குள் திருகோணமலை அர்ச்சகருக்கு நேர்ந்த கதி | Hindu Priest Attacked Inside Temple In Denmark

"தமிழர்கள் தமிழில் வழிபட தமிழர்களே தடையாக இருக்கும் இப்பேரிடர் நிகழ்வு தமிழுக்காக உயிர்நீத்த வலி சுமந்த மே மாதத்தில் நிகழ்ந்திருப்பது பெரும் கொடுமை.

இந்த வன்முறைக்கு அறிவு படைத்த நற்தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் தமிழ் வழிபாடு டென்மார்க் வேல்முருகன் திருக்கோவிலில் நடைபெற வழி செய்து வன்முறைக் குழுவிற்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இயற்கையும் இறையும் அறமும் கொடுமைக்காரர்களுக்கு தண்டனை வழங்கும்" என கண்டன அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவின் செய்தியாளர் சந்திப்புக்களை செய்தியாக்க ஊடகம் ஒன்றுக்கு தடை

சஜித் பிரேமதாசவின் செய்தியாளர் சந்திப்புக்களை செய்தியாக்க ஊடகம் ஒன்றுக்கு தடை

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US