நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு (Shehan Semasinghe) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணி மற்றும் மாலை 4.09 மணியளவில் இரண்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக அலுவலக ஊழியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப் போவதில்லை எனவும், தனது அச்சுறுத்தலை புறக்கணித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் தொலைபேசியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.

கோட்டை பொலிஸார் விசாரணை
மேலும்“தேர்தலின் போது நாங்கள் தான் உங்களுக்கு உதவி செய்தோம், கொழும்பில் இருக்கச் சொன்னோம், இனி இங்கு வரவேண்டாம் என்று சொன்னோம், அப்படிச் செய்தால் உயிரைக் கொடுத்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri