சஜித் பிரேமதாசவின் செய்தியாளர் சந்திப்புக்களை செய்தியாக்க ஊடகம் ஒன்றுக்கு தடை
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நடத்தும் எந்த செய்தியாளர் சந்திப்புகளையும் செய்தியாக்க இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடகம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய சஜித் பிரேமதாச, இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதன்போது அந்த செய்தித்தாளை அவர் "ஊடகக் கேலிக்கூத்து" என்று விமர்சித்துள்ளார்.
மதுபான நிலைய அனுமதிகள்
நாட்டில் மதுபான அனுமதிப்பத்திரங்களை தடை செய்வது தொடர்பில் தாம் கூறிய கருத்தை குறித்த ஆங்கில நாளிதழ் வேண்டுமென்றே தவறாக கோடிட்டுள்ளது. பின்னர் இந்த செய்தி மாற்றப்பட்டுள்ளது எனினும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தாம் பதவிக்கு வந்தால், மதுபான நிலைய அனுமதிகள் இலஞ்சமாக வழங்கப்படுவதை இரத்துச்செய்வேன் என்று கூறியதை, குறித்த நாளிதழ், தான் பதவிக்கு வந்தால், மதுபான விற்பனையங்களை தடைசெய்யப்போவதாக தவறாக கோடிட்டிருந்தது என்று சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தமது எந்த ஊடக சந்திப்புக்களுக்கும் குறித்த ஆங்கில நாளிதழை தடை செய்வதாக சஜித் பிரேமதாச, தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
.@Dailymirror_SL is a mockery of journalism. Deliberately misquoted me and later changed the article, no correction issued. I said I will cancel liquor licenses issued as bribes not ban liquor stores if we come to power. What I will ban is @Dailymirror_SL from any press briefings https://t.co/KhyHqOlFiB
— Sajith Premadasa (@sajithpremadasa) May 16, 2024
எனினும் எந்த அரசியல்வாதியின் தாளத்திற்கும் தாம் ஆடவில்லை என்று குறிப்பிட்டுள்ள சஜித்தினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆங்கில செய்தித்தாள், மாறாக மக்களுக்கு துல்லியமான முறையில் தாம் சேவை செய்வதாக அவருக்கு நினைவுபடுத்தியுள்ளது.
மேலும், ஐக்கிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்புக்களில் இருந்து அவர் தடை செய்திருப்பது அவருக்கே இழப்பு என்றும் ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |