திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனம்: பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்

Sri Lankan Tamils Sri Lanka
By Dharu Dec 15, 2023 01:52 AM GMT
Report

இமயமலைப் பிரகடனமானது தமிழர் தரப்பில் எவருடனும் ஆலோசிக்கப்படாமல் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

 தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில் உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடானது அதிருப்தி அளிப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை  மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)

சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல்

“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில்,  உலகத் தமிழர் பேரவை வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் படிப்படியாக தங்களுக்கு உரித்தான அனைத்தையும் இழந்து வருகின்றனர்.

திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனம்: பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் | Himalaya Declaration Crisis

சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் பௌத்த மதகுருமார்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.

இதன் காரணமாகவே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் பொருட்டு தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தாமல் இரத்து செய்யப்பட்டன.

இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சுழற்சி மற்றும் இனப்படுகொலைக்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா அரசானது, நாட்டை ஒற்றை இன, ஒரு மொழி, மற்றும் ஒற்றை மத (mono ethnic, mono lingual, mono religious) சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதே ஆட்சியாளர்கள் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.


இந்த நிலையில் உலகத் தமிழர் பேரவை உடனான சந்திப்பின் பின்னர் பௌத்த மதகுருமார்கள் வெளியிட்ட பிரகடனத்தில் இலங்கையின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் திகைப்பையும் உருவாக்கியுள்ளது.

இந்தச் சந்திப்பு தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் அரசியல் யுக்தி கொண்டதா என தமிழ் சமூகம் சந்தேகம் கொள்கின்றது.

எந்தவித கலந்தாலோசனையும் இல்லாமல் ரகசியமாக வைக்கப்பட்ட ‘இமயமலைப் பிரகடனம்' தமிழ் மக்களது எரியும் பிரச்சினைக்கு எண்ணை ஊற்றுவதாக உள்ளது.

புலம்பெயர்தல் அனுமதிகள் தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள தகவல்

புலம்பெயர்தல் அனுமதிகள் தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள தகவல்

திரைமறைவில் அரங்கேற்றம்

'இமயமலைப் பிரகடனம்' பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்புக்கு முன்னர் இந்த விடயம் தமிழர் தரப்பில் எவருடனும் ஆலோசிக்கப்படாமல் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மறுபுறம் GTF இதே போன்ற செயற்பாட்டை 2015 இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஆரம்பித்து, அது ஒட்டுமொத்த தோல்வியில் முடிந்தது.

திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனம்: பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் | Himalaya Declaration Crisis

அதன் முழுமையான செயல்முறையும் இலங்கை அரசால் வசதியாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாயை என்பதை உணர்ந்து கொள்ள உலகத் தமிழர் பேரவைக்கு (GTF) 5 ஆண்டுகள் பிடித்தது.

UNHRC செயல்முறையை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்யவும், கடந்த கால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சிறிலங்காவினை மறுகட்டமைக்க வேண்டும் என அதிகரித்து வரும் அழுத்தங்களை தந்திரமாக கையாளவும் மைத்திரிபால மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் (GTF) உதவி தேவைப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தொடர்ச்சியாக பதவியிலிருந்த இலங்கை அரசாங்கங்களின் தோல்வியுற்ற கொள்கைகளால் மீண்டும் மீண்டும் வன்முறை தாக்குதல்கள், கொலை, கொள்ளைகள் மற்றும் சொத்துக்கள் அழித்தல், உயர் மட்ட ஊழல், குற்றத்திற்கான தண்டனையிலிருந்து விலக்களித்தல், பொருளாதார பின்னடைவு, இராணுவமயமாக்கலுக்கான நிதி விரயம், கடன் பொறி, அதீத அதிகார மையமயமாக்கல், சர்வதேச தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார வங்குரோத்து ஆகியவற்றிற்கான மூல காரணங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்யாமல் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆழமாக நோக்காமல் மேலோட்டமாக ஒரு அற்பமான விடயமாக கருதினால் அதற்கான நிலைத்து நிற்க்க கூடிய தீர்வு கிட்டப் போவதில்லை.

அரசியலமைப்பு ரீதியாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளுக்கு தீர்வு காணாமல், அர்த்தமுள்ள எந்த மாற்றங்களும் அங்கு ஏற்படப் போவதில்லை.

பௌத்த சிங்கள பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறாமல், மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி சிங்கள-பௌத்த மேலாதிக்கம் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 'கல்லிலிருந்து இரத்தம் எடுப்பது;'' போன்றதாகும்.

இவர்கள் இனவாதத்தை சிங்கள மக்கள் மீது தூவுவதன் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதை உயிர் மூச்சாகக் கொண்டுளனர். ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தை ஆராய்ந்து நிகழ் காலத்தை தனக்குச் சாதகமாகக் கையாளுபவர்.

தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் GTF இன் சந்திப்பு ரணிலுக்கு வாய்ப்பளிக்கும்.

மொட்டு கட்சியின் பலம் இன்று நிரூபிக்கப்படும்: சாகர காரியவசம் ஆரூடம்

மொட்டு கட்சியின் பலம் இன்று நிரூபிக்கப்படும்: சாகர காரியவசம் ஆரூடம்

சர்வதேச மட்டத்திலான ஆதரவு

கடந்த காலத்தை தனக்கு சாதகமாக கையாளும் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பு, புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுடன் பேசுவதில் வெற்றி என்ற போர்வையில் தமிழர்களின் குரல்களை மூடி மறைத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு GTF இன் சந்திப்பு ரணிலுக்கு வாய்ப்பளித்துள்ளது.

சர்வதேச தலையீட்டை அகற்றி உள்நாட்டின் பொறிமுறைக்குள் முடக்கி விடும் நோக்கோடு உருவாக்கப்பட்ட உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவிற்கான (TRC) சர்வதேச மட்டத்திலான ஆதரவை திரட்டவும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் ரணிலுக்கு இது வாய்ப்பளித்துள்ளது.

திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனம்: பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் | Himalaya Declaration Crisis

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் சமாதானத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான தீர்வினை அடைவதற்காக இந்த அமைப்புக்கள் தங்கள் நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் கடுமையாகச் செலவிடுகின்றன.

இந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்துகின்றன.

UNHRC இன் கடுமையான தீர்மானங்கள் 46/1 மற்றும் 51/1 இற்கு அமைய இலங்கையை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதுடன் (Sri Lanka Accountability Project - SLAP), 'மேக்னிட்ஸ்கி' (Magnitsky) சட்டம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் தடைச் சட்டம் (Global Human Rights Sanctions Act) போன்றன மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்துதல், உறுப்பு நாடுகளால் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்களை பயன்படுத்தப்பட வேண்டும் என்று பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவல நிலை பற்றிய சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஏற்படுத்தப்பட்டு வரும் புரிதலினை GTF இன் நடவடிக்கையின் விளைவுகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன.

OHCHR ஆல் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை மீதான பொறுப்புக்கூறல் திட்டத்தை (SLAP) பாதிப்படையச் செய்கிறார்கள். - சர்வதேச குற்றவியல் விசாரணை பொறிமுறைக்கு வழிவகுக்கும் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் மாற்றாக உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை (TRC) போன்ற ஒரு உள்ளக செயல்முறைக்குள் அடக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியாகும்

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற உலகத் தலைவர்களை நேரடியாகத் தலையிடச் செய்யும் முயற்சிகள் ஊடாக சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

அத்தகைய தீர்வில் அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் உருவான பல ஒப்பந்தங்களை சிங்கள தரப்புகள் இரத்து செய்ததன் அடிப்படையில், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒன்றைக் கண்டறிவதற்கான எந்தவொரு உள்ளக செயல்முறையிலும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இதன் விளைவாக, GTF இன் முயற்சி பாதிப்பைக் கொடுக்கும் என்பதோடல்லாமல் தமிழ் அமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக சிரத்தையுடன் உருவாக்கிய தீர்வுக்கான உத்திகளையும் முயற்சிகளையும் நாசமாக்கிவிடும். 

வடக்கு - கிழக்கில் இன்று முதல் கனமழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு - கிழக்கில் இன்று முதல் கனமழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சர்வதேச சமூகத்திற்கு தவறான செய்தி

இலங்கை அரசாங்கமும் ஊடகங்களும் GTF இன் பௌத்த மதகுருமார்களுடனான சந்திப்புக்கள் குறித்து செய்துவரும் விளம்பரங்கள் சர்வதேச சமூகத்திற்கு தவறான செய்தியை பரப்பியுள்ளன.

தமிழ் மக்கள் தங்களின் நீண்டகால இன்னல்களுக்கு விடிவு காணப் போராடுகிறார்கள். அதற்கு எதிரானதொரு கருவியாகவே இது பயன்படும்.

திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனம்: பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் | Himalaya Declaration Crisis

சிங்கள பௌத்தர்களின் தயவில் தமிழர்களை கை விட்டுவிட்டு, இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு இல்லாத கொள்கையை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு வாய்ப்பாகி விடும்.

இந்த வேளை, GTF எந்த விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை கேள்விக்குள்ளாக்குவது பொருத்தமானது.

புலம்பெயர் தமிழ் 14 அமைப்புக்களின் கூட்டு அமைப்பாக பிரான்சில் GTF 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, அவற்றில் 13 தமிழ் அமைப்புகள் நாளடைவில் தங்கள் அங்கத்துவத்தை மீளப் பெற்று விட்டன.

எனவே, GTF பெரும்பான்மையான புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு முடிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதே தவறானதாகும்.

பலத்துடன் செயற்படும் வெவ்வேறு தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் நீதியுடன் கூடிய சமாதானத்துடன் வாழ்வதற்கு உலக நாடுகளின் தலையீட்டைக் கோருகிறார்கள்.

GTF இன் இந்த நடவடிக்கை அந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி புலம்பெயர் தமிழர்களை பிளவுபடுத்தி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் இலங்கை அரசின் திட்டத்திற்கு வகை செய்கிறது.

நாம் யதார்த்தமான வகையில் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சமாதான சகவாழ்வு மற்றும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கான காலவரையறையுடன் கூடிய உறுதியான நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டியதுதான் தகுந்த வழியாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US