தமிழர் பகுதியில் மான்களின் நடமாட்டம் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள விபத்து எச்சரிக்கை (Video)
திருகோணமலை கோனேஸ்வர ஆலயத்திலிருந்து மான்கள் நகர்புறத்திற்கு அதிகமாக வருவதினால் விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“மான்களுக்கு உண்பதற்கு போதுமான உணவு இன்மையினாலேயே மான்கள் உணவைத் தேடி நகர்பகுதிகளில் அதிகளவில் நடமாடி வருகின்றன.
புத்திஜீவிகள் கோரிக்கை
இதனால் வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் மான்கள் இறக்கும் விதமும் அதிகரித்துள்ளது.
அத்துடன் திருகோணமலை பொது சந்தையில் காலையில் மான்கள் உணவைக் தேடி வருவதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மான்கள் பாதுகாப்பு திட்டம்
இருந்த போதிலும் மான்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து
பொலித்தீன்களையும் உட்கொண்டு வருகின்றதையும் அவதானிக்க கூடியதாகவும் எதிர்காலத்தில் மான்களை பாதுகாப்பதற்கு சிறந்த திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்”எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



