90 வருடங்களில் மிகப்பெரிய சாதனையை எட்டிய இந்திய மகளிர் அணி
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 603 ஓட்டங்களை பெற்று 90 வருடங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் குறித்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று (29.06.2024) இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்காக ஆரம்பத்தில் களமிறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 292 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
ஷபாலி வர்மா
ஸ்மிருதி மந்தனா 149 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஷபாலி வர்மா 205 ஓட்டங்களை பெற்றார்.
மேலும், ரிச்சா கோஷ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் தலா 86 மற்றும் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை, தென்னாபிரிக்க அணி சார்பாக டெல்மாரி டக்கர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அத்துடன், அவுஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற 575 ஓட்டங்கள் என்ற சாதனை இன்றையதினம் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |