அனுதாபம் தேடும் சந்திரிக்காவின் பின்னால் மறைந்துள்ள கோர முகம்
1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல அரசியல் பின்னணிகளின் அடிப்படையில் சந்திரிக்கா குமாரதுங்க இலங்கை அரசியலில் பிரவேசித்தார்.
அனைத்து சிங்கள மக்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவருமே சந்திரிக்காவை ஒரு சமாதான தேவதையாகவே பார்த்தார்கள். அந்த காலப்பகுதியில் தமிழர் தாயக பிரதேசம் மிகப்பெரிய பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருந்ததது.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் சந்திரிக்கா ஆட்சிப்பீடம் ஏறியதோடு தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
குறிப்பாக அதேசமயத்தில் இலங்கை இராணுவத்தினருடன் தமிழர்களுக்கு எதிராக பல வியூகங்களையும் வகுத்தார்.
இதன்போது சந்திரிக்கா பதவியில் இருந்த 10 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவப்படை புரிந்த கொடுமைகள் என்பதுதான் புன்னகைக்கு பின்னால் இருந்த சந்திரிக்காவின் கோர முகமாகும்.
இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




