இஸ்ரேலை எச்சரித்த ஹிஸ்புல்லா தலைவர்: நெதன்யாகு பதிலடி
ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுக்கு விடுத்த கடும் எச்சரிக்கையை அடுத்து, ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போரில் களமிறங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தொடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், முதன்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், தங்கள் முன் அனைத்து வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹமாஸ் படைகளின் தாக்குதலை மொத்தமாக பாராட்டிய அவர், அது புனிதப்போர் என கூறியுள்ளார்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேலும், இந்தப் போரானது இன்னொரு கட்டத்திற்கு மிக விரைவில் நகரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் இஸ்ரேலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், அவர்களின் பலவீனம் அம்பலமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஹசன் நஸ்ரல்லாஹ் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
“வடக்கிலுள்ள எங்கள் எதிரிகளுக்குச் சொல்கிறேன், எங்களைச் சோதிக்க வேண்டாம், நீங்கள் பெரும் விலை அளிக்க நேரிடும்” என்றார்.
இதனிடையே, ஈராக் மற்றும் யேமன் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதிக ஆயுத பலம் கொண்ட மேலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முட்டாள்தனமான தவறு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எப்போதும் தயார்
அத்துடன் நாங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளோம் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.
2006ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா முன்னெடுத்த சண்டையில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டடுள்ளனர்.
ஹிஸ்புல்லா உலகிலேயே அதிக ஆயுத பலம் கொண்ட, அரசு சாரா குழுக்களில் ஒன்றாகும்.
இவர்கலிடம் 60,000 உயர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர். இவர்களிடம் தம்வசம் வைத்துள்ள ஏவுகணையால் இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
