அடிமைகளை போல் வாழும் தமிழ் அகதிகள்: நீக்கப்படும் ஆதரவு கரம் (Video)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்து, இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகள் அனைவரும் அடிமைகளை போல் வாழ்கின்றனர் என தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் கவலை வெளியிட்டார்
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
''அகதிகளாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால் இலங்கைக்கு அவர்களை அழைத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
எனினும், தற்போது அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
அடிமைகளை போலும், கட்டுபாடுகள் நிறைந்த சூழலிலும் அவர்கள் வாழக்கூடிய நிலையே தற்போது காணப்படுகிறது" என்றார்.
நாம் 200 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் தனது பூர்வீக நாடான இலங்கைக்கு வருகைதந்துள்ள பொன். ஜெயசீலன் மேலும் தெரிவித்த கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்…

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
