புலம்பெயர் முதலீடுகளில் அரசியல் பிரயோகிக்கப்படுகிறது: தமிழ் தொழிலதிபர் விசனம்
இலங்கையில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மதிக்கப்படுவதில்லை எனவும் எல்லாவற்றிலும் அரசியல் பிரயோகிக்கப்படுவதாகவும் பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் நிரந்தரமானதாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழமோ, 13ம் திருத்தச் சட்டமூலமோ அன்றி சிங்கள மக்களுக்கு நிகரான உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நம்பிக்கை
இவ்வாறான ஓர் அரசியல் தீர்வுத் திட்த்தின் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு தெற்கு தரப்புக்களுக்கு இடையில் பிழையான அபிப்பிரயாங்கள் பாரப்பப்பட்டுள்ளதாகவும் இது முற்றிலும் ஒரு சிலரின் சுயலாப நோக்கத்திற்கானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சதுர - புலம்பெயர் இலங்கையர் என்ற வகையில் நீங்கள் ஒரு தனிநபர் உங்களைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பாஸ்கரன் - இல்லை அவர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும். இங்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அவர்கள் வரவேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எங்களுடைய மக்களுக்கு நிறைய உதவிகளை வழங்க வேண்டும்.
எங்களது மக்கள் இன்னும் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளனர். இருக்கின்றனர் நான் வடக்கு கிழக்கில் அநேகமான பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறேன்.
நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றேன். நீங்கள் என்னுடைய யூடியூப் அலைவரிசையை பார்க்க முடியும்.
பாஸ்கரன் கந்தையா என்ற பெயரில் அந்த யூடியூப்சேனல் இயங்குகிறது. உறவு பாலம் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றேன்.
அதில் என்னுடைய அனைத்து செயற்பாடுகளையும் நீங்கள் பார்வையிட முடியும். வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை.
புலம்பெயர் மக்களின் உதவி
உரிய மலசலவச கூட வசதிகள் இல்லை. தண்ணீர் வசதி கிடையாது சிலர் குடிநீருக்காக 5 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய நேரிட்டுள்ளது.
மேலும் ஐந்து கிலோ மீட்டர் சென்று ஏனைய தேவைகளுக்கான நீரை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறான ஒரு வாழ்க்கை முறையே வடக்கு கிழக்கு மக்கள் தற்பொழுது அனுபவித்து வருகின்றனர்.
எனவே இந்த மக்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். புலம்பெயர் மக்களின் உதவியுடன் இவர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
என்னுடைய நிகழ்ச்சிகளின் போது தயவு செய்து இங்கு வந்து உதவுங்கள் என்றே கோரி வருகின்றேன். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஈடுபடுங்கள் உதவுங்கள் என்று நான் புலம்பெயர் மக்களிடம் கோரி வருகின்றேன்.
தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களே அவர்களது வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் 500 பேருக்கு வேலை கொடுக்கலாம்.
அவர் 500 பேருக்கு வேலை கொடுக்கலாம் இவர் 500 பேருக்கு வேலை கொடுக்கலாம் இதன் ஊடாக பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
முதலாவதாக வேலை வாய்ப்பு கிடைப்பதன் மூலம் சமூகத்தில் கெட்ட விடயங்கள் இல்லாதொழிக்கப்படுகிறது. இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
அது எமது பொருளாதாரத்திற்கும் உதவும். மேலும் அனைவருக்கும் என்னுடைய நாட்டிற்கு நான் ஒரு ஏதாவது ஒன்றை செய்திருக்கிறேன் என்ற பற்றை ஏற்படுத்தும்.
எனவே இவ்வாறு புலம்பெயர் சமூகத்தில் இருக்கின்ற அனைவரும் எங்கிருந்தாலும் இந்த விடயத்தை யோசித்துப் பாருங்கள்.
பிரச்சனைகள் உண்டு எனினும் ஏதாவது ஒரு வகையில் நாமே எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. நீங்கள் எல்லோரும் வந்தால் நல்லது. நான் ஒரு உதாரணம் மட்டுமே.
அபிவிருத்தி செய்வதன் நோக்கம்
நான் இங்கு வந்து இந்த திட்டத்தை அபிவிருத்தி செய்வதன் நோக்கம் புலம்பெயர் மக்களுக்கு இந்த விடயத்தை காண்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
இவ்வாறு என்னுடைய வெற்றி ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். நான் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தால் மட்டுமே அங்கு இருக்கின்ற மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.
சதுர - நிச்சயமாக நீங்கள் வெற்றி அடைய விட்டால் இதற்கு யாரும் வரமாட்டார்கள். இவ்வாறான நிலையில் இருப்பவர் ஐரோப்பாவில் பெரிய வியாபாரம் செய்த ஒருவர் இங்கு வந்து முதலீடு செய்து இது முடியும் என நிரூபிப்பதன் மூலம் இதனை செய்ய முடியும்.
அவ்வாறு இல்லாவிட்டால் வேறு முதலீட்டாளர்களை அழைத்து வருவது இலகுவான காரியமா?
பாஸ்கரன் - எனது குடும்பத்தில் யாரும் இங்கு இல்லை எனது உறவினர்கள் கூட இங்கே இல்லை. எனது குடும்பத்தின் 25 பேர் இறந்துவிட்டனர்.
அம்மா பாட்டி சகோதர சகோதரிகள் அத்தை மாமா அனைவரும் உயிரிழந்து விட்டனர். அதை விடுங்கள். எனக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர் .ஒருவர் நெதர்லாந்திலும் மற்றவர் இந்தியாவிலும் வசித்து வருகின்றார்.
ஒரு சிறிய குடும்பமே உள்ளது. நான் இங்கு வந்தது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நான் இங்கு வந்தேன். உண்மையில் நான் எனது பிள்ளைகள் மனைவி ஆகியோரை பிரிந்திருக்க நேரிட்டுள்ளது. அது சற்று கடினமான உணர்வாகும்.
பாருங்கள் என்னுடைய தோளின் நிறம் மாறியுள்ளது இந்த காலநிலை காரணமாக அவ்வாறு மாற்றமடைந்துள்ளது. இது எல்லாம் எனக்கு தேவையில்லாத விடயம் எனினும் நான் இந்த இடத்தை நேசிக்கின்றேன் நான் இந்த மக்களை நேசிக்கின்றேன்.
நான் இந்த தேசத்தை நேசிக்கின்றேன் நிச்சயமாக இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வேன் நான் எனது நண்பர்களுக்கு இதனை காண்பிப்பேன் வாருங்கள் எல்லோரும் வாருங்கள் என அழைப்பேன் நாட்டை கட்டி எழுப்ப முடியும்.
அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள் என அழைப்பேன் இதுவே என்னுடைய செய்தி நான் இதனையே புலம்பெயர் மக்களுக்கு வழங்குகின்றேன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் நான் இதில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என அரசாங்கம் நினைக்கின்றது.
பொருளாதார ரீதியான அபிவிருத்தி
அது பிழை அபிவிருத்தி திட்டமானது எல்லா பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வாக அமையப்போவதில்லை.
முழுமையான தீர்வு என்பது முதலில் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் ஒன்றை முன் வைப்பதாகும். அரசியல் ரீதியான தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டால் அபிவிருத்தி தானாகவே மேற்கொள்ளப்படும் அரசாங்கம் இதை மாற்றி யோசிக்கின்றது.
நான் பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்து இருக்கின்றேன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நண்பர்கள் என பலரை சந்தித்து இருக்கின்றேன்.
அவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியான அபிவிருத்தி தொடர்பாக பேசுகின்றனர்.
எனினும் அனைவரும் இதன் ஊடாக அரசியல் ரீதியான பிரச்சனைக்கு தீர்வு ஏற்றப்படும் என நினைக்கின்றார்கள். எனினும் அவ்வாறு இல்லை அப்படி நடக்காது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் அரசியல் ரீதியான தீர்வு திட்டம் ஒன்று அவசியம் அவ்வாறான ஒரு நிலைமையில் மட்டுமே எம்மால் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்ய முடியும்
சதுர - வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கு தெற்கில் அல்லது வெள்ளவத்தையில் அல்லது நாட்டின் வேறு எந்த ஒரு இடத்திலும் காணிக் கொள்வனவு செய்ய முடியும் எனினும் தெற்கைச் சேர்ந்த ஒருவரினால் வடக்கில் காணி ஒன்றை கொள்ளும் செய்ய முடியுமா?
பாஸ்கரன் - ஆம்… நிச்சயமாக சதுர தேசவழமை சட்டம் என பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன அல்லவா.
இப்பொழுது இவருக்கு இங்கே காணி ஒன்றை கொள்வனவு செய்ய முடியும். இவ்வளவு செய்ய முடியாது என இல்லை. இலங்கையில் எவர் இந்த இடத்தில் காணி வாங்க முடியும். இந்த இடத்தில் காணி வாங்க முடியாது என சட்டம் இல்லை.
வடக்கில் இருப்பவர்கள் தெற்கில் காணி கொள்வனவு செய்ய முடியும். கிழக்கில் இருப்பவர்கள் தெற்கில் காணிக் கொள்வனவு செய்ய முடியும்.
தெற்கில் இருப்பவர்களுக்கு வடக்கில் காணிக் கொள்வனவு செய்ய முடியும் உங்களுடைய கேள்வி சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் காணிக் கொள்வனவு செய்ய முடியுமா என்பதா?
எவ்வளவு பேர் காணி வாங்கி இருக்கிறார்கள். நிலாவெளிக்கு வாருங்கள் எத்தனை ஏக்கர் காணிகளை சிங்களவர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பதை நான் காண்பிக்கின்றேன்.
சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையில் பிரச்சினை
பாசிக்குடா, மட்டக்களப்பு, வுவுனியா, யாழ்ப்பாணம், கீரிமலை போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்கள் எவ்வளவு காணி வாங்கி இருக்கிறார்கள் என்பதை நான் காட்டுகின்றேன்.
தமிழர்கள் கொள்ளளவு செய்யும் காணியின் அளவு ஒரு பரப்பு அல்லது ரெண்டு பரப்பு அல்லது ஐந்து பரப்பாக இருக்கும்.
எனினும் சிங்களவர்கள் ஏக்கர் கணக்கில் காணிகளை கொள்வனவு செய்கின்றனர். சிங்களவர்கள் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் என காணி கொள்வனவு செய்கிறார்கள்.
சதுர - தெற்கில் இருக்கும் போது எனக்கு அப்படியே தோன்றியது நான் உன் மேல் அப்படியே உணர்ந்தேன்.
பாஸ்கரன் - இதுதான் பிரச்சனை தெற்கில் வாழும் மக்கள் இங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. அங்கு வந்து வேறு மாதிரியான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.
உண்மையில் அப்படி இல்லை இங்கு எத்தனையோ தமிழ் பிள்ளைகள் சிங்கள பிள்ளைகளை மணம் முடித்துள்ளனர். எத்தனையோ சிங்கள மக்கள் தமிழாக்களை திருமணம் செய்துள்ளனர்.
நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்து பாருங்கள் அவர்கள் மிகவும் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்கள் ஒன்றாக உணவு உட்கொள்கின்றனர். ஒன்றாக கூடுகின்றனர்.
ஒரு சில மக்கள் மட்டுமே தொடர்ச்சியாக பிரச்சினைகளை உருவாக்கி சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.
சாதாரண மக்கள் அவ்வாறு இல்லை நான் எனது நண்பர்களை மச்சான் என்று அழைக்கின்றேன், அவர்களும் என்னை அவ்வாறு அழைக்கின்றார்கள்.
அதுவே சிங்கள தமிழ் உறவாக காணப்படுகின்றது. இந்த நாட்டில் பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கும் தரப்பினர் இருக்கின்ற அவர்களை இந்த நாட்டில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் அவர்கள் நம்மை ஒன்றாக இருக்க விடுவதில்லை.
நீங்கள் என்னுடைய நண்பர். நீங்கள் என்னிடம் அடிக்கடி பேசுவீர்கள் எங்கள் இருவருக்கும் இடையில் அரசியல் அல்லது வேறு எந்த வாதங்கள் கிடையாது.
பாஸ்கரன் ஓட பேச வேண்டாம் அவர் ஒரு இனவாதி என குறிப்பிடுகின்றனர். அப்படி இல்லை.
கலாச்சார விடயங்களில் ஒற்றுமை
இந்த விடயம் எனக்கும் நடந்துள்ளது, “இவன் இனவாதி இவனோடு பேச வேண்டாம்” எனக் கூறியிருக்கின்றார்கள்.
எத்தனை தமிழர்கள் சிங்களர்களை மணந்து மணந்துள்ளனர். எல்ரீரீஈ முன்னாள் உறுப்பினர்களும் சிங்களவர்களை திருமணம் செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த நடேசன் சிங்கள பெண் ஒருவரை மணந்துள்ளார். நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர் .தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அது எனக்கு நன்றாக தெரியும்.
எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. யாரேனும் ஒருவர் யாரோ பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
அவர்கள் நலனுக்காக இவ்வாறு அடிக்கடி பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். நான் இதை தொடர்ந்தும் கூறுகின்றேன்.
சதுர - பொதுவான மேடை ஒன்றை அமைப்பது இலகு. எங்களுக்கு மரபுரிமைகள் உண்டு. கலாச்சார விடயங்களில் ஒற்றுமை உண்டு. உணவு வகைகளும் ஒரே விதமானவை. இங்கே நிறைய சிங்களவர்கள் வேலை செய்கிறார்கள். கேளுங்கள் அவர்களிடம் ஏதாவது பிரச்சனை உண்டா என்று?
பாஸ்கரன் - எமது பிரதான சமயங்களை நிபுணர் தெற்கில் உள்ளவர், பயிற்சிக்காக வரும் மாணவர்கள் தெற்கைச் சேர்ந்தவர்கள்.
இந்த வினோத பூங்காவின் கட்டுமானப் பணி ஒப்பந்தம் தெற்கு மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.
எங்களுக்கு அவ்வாறு பிரச்சினை இல்லை.
சதுர - உண்மையில் அதே தானா இங்கும் நடக்கிறது?
பாஸ்கரன் - நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை தருகின்றேன். நான் இதை தமிழில் கூறுகின்றேன் நானும் எனது மனைவியும் பிள்ளைகளும் கொழும்பு சென்றோம். அனுராதபுரத்தை தாண்டியதும் எனது மனைவிக்கு பாப்கோன் சாப்பிட ஆசை ஏற்பட்டது.
எனது சாரதி வாகனத்தை நிறுத்தினார். எனது மனைவி அந்த கடைக்கு சென்றார் .வீதியோரங்களில் பாப்காரர் இளநீர் போன்றவற்றை விற்பனை செய்யும் பல்வேறு இடங்கள் காணப்படும் அல்லவா.
அவ்வாறான ஒரு இடத்திற்கு எனது மனைவி சென்றார். எனது மனைவி சென்று 40 நிமிடங்களாக அவரை காணவில்லை. நான் மனைவியிடம் சத்தம் போடுகின்றேன். வாங்குவதற்கு 40 நிமிடங்கள் தேவையா? என்ன செய்கின்றீர்கள்? என சத்தம் போட்டேன்.
இந்த பாப்கோன் விற்ற குடும்பத்தினரும் எனது மனைவியும் நன்றாக உரையாடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
உண்மையில் அவர்கள் இருவரும் தாயும் மகனும் போல் பழகிக் கொண்டிருந்தனர். எனது மனைவிக்கு ஒரு சிங்கள வார்த்தையும் தெரியாது. அந்த அம்மாவுக்கு ஒரு வார்த்தை தமிழில் தெரியாது. 40 நிமிடங்களாக இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த அம்மா என் மனைவியின் கையைப் பிடித்து பேசுகின்றார். நான் இதை பார்த்து என்ன நடக்கிறது? என எனது மனைவியடம் கேட்டேன்.
“அவர்கள் நல்ல மனிதர்கள் அப்பா அவர்கள் என்னுடன் பேச விரும்புகிறார்கள்” அந்த அம்மா பாப்கோர்னுக்கு பணம் எடுக்கவில்லை.
ஏழைகள் தானே எனது மனைவிக்கு அவர்களிடம் இலவசமாக வாங்குவதற்கு விருப்பமில்லை. 500 ரூபா கொடுப்போம் என்றார்.
உரையாடல் 40 நிமிடங்களாக நீடித்தது. இருவருக்கும் மொழி தெரியாது நான் தான் சிங்கள தமிழ் மொழிகளுக்கு இடையில் பாலமாக இருந்தேன். எனினும் சிலர் இந்த உறவினை உடைத்து பார்க்கிறார்கள்.
புலி என கூற வேண்டாம்
சதுர - யார் அவ்வாறு செய்கிறார்கள்?
பாஸ்கரன் - சகோதரரே உங்களுக்கு என்னிடமிருந்து அதனை பெற்றுக் கொள்ள விருப்பமா?
சதுர - இல்லை அப்படி இல்லை.
பாஸ்கரன் - அது ஒரு நல்ல உதாரணம். 40 நிமிடங்களாக அவர்கள் இருவரும் உரையாடி இருந்தனர். இப்பொழுது நாங்கள் அந்தப் பக்கமாக எனது மனைவி அந்த அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த அம்மாவிற்கோ அந்த அம்மாவின் குடும்பத்தினருக்கும் ஒரு சொல் கூட தமிழில் தெரியாது.
எனது மனைவிக்கு சிங்களம் தெரியாது. அந்த அம்மா எனது வாகனத்திற்கு அருகாமையில் வந்து எனக்கு இரண்டு பாப்கோர்ன் தந்தார். நான் பணம் தருகிறேன் என்று கூறினேன்.
அந்த அம்மா பணத்தை வாங்க மறுக்கின்றார். எனது மனைவி நல்ல விருப்பம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான ஒரு கலாச்சாரத்தை நான் கட்டி எழுப்ப வேண்டும். இனவாத மக்கள் ஒருபுறம் இருக்கட்டும். எங்களினால் ஒன்றிணைந்து சமைத்து சாப்பிட்டு கூடி மகிழ்ந்திட முடியும்.
சதுர - இனவாதம் இனவாதம் என்று கூறுகின்றனர் இனவாதம் பற்றி அதிகம் பேசுபவர்களே இனவாதிகளாக இருக்கின்றனர்.
எனவே இங்கே பிரிப்பதற்கு எதுவும் இல்லை நாங்கள் எங்களுடைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் பேசிக் கொள்கிறோம்.
ஏதோ ஒரு காரணத்திற்காக நாங்கள் பிரிந்து இருக்கின்றோம் எனக்கு தெரியவில்லை. இந்த பிரச்சினை எவ்வாறு தீர்ப்பது என்ற உரையாடல் முக்கியமானது.
அங்கு இருந்து கொண்டு புலி என கூற வேண்டாம்.
புலிகளுக்காக பேசியதாக சொல்ல வேண்டாம். இந்த நாட்டை கட்டி எடுப்பதற்கு இதுவே முக்கியமான நாங்கள் நாட்டை கட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும்?
பாஸ்கரன் - நாம் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமானால் இரு இன சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்று தமிழ் தரப்பிலிருந்தும் மற்றொன்று சிங்கள தரப்பில் இருந்தும் தமிழ் மக்கள் சிங்கள பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
சிங்கள மக்கள் தமிழ் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அவர்களுடன் பேசி எங்களுடைய வலிகளை தெளிவு படுத்த வேண்டும். எங்களுடைய பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டும்.
அவர்கள் இங்கு வரவேண்டும் அவ்வாறான உறவு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களது வலிகளை பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறான ஒரு நிலையில் நல்லதொரு பிணைப்பினை கட்டி எழுப்ப முடியும் அவ்வாறான ஒரு பின்னணியில் உறவுகள் வலுப்பெறும். இவ்வாறான உறவினை ஏற்படுத்துவது இடையில் இருப்பவர்களால் தற்பொழுது தடுக்கப்படுகிறது யாராவது ஒரு தரப்பினர் சிங்கள மக்களுடன் சென்று பேசி அவர்களது பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்று கவனம் செலுத்துவதில்லை.
அவர்கள் எங்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்பது ஒரு பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க வேண்டும். “நாம் தீவிரவாதி இல்லை, நீங்கள் இனவாதிகள் இல்லை, நான் மனிதர்கள், இதே நாட்டில் வாழ்ந்து வருகின்றோம், நீங்கள் அந்தப்பக்கம் இருக்கிறீர்கள், நாங்கள் இந்த பக்கம் இருக்கின்றோம், இருவரும் இணைந்து கரகோஷம் எழுப்புவோம், அப்பொழுது சத்தம் பலமாக கேட்கும்” அவ்வாறு நினைக்க வேண்டும்.
யதார்த்தமான ஒரு தலைவர்
அந்த என்ன வெளிப்பாடு வரவேண்டும். நான் சொல்வது புரிகிறதா?
சதுர - நானும் அதைத்தான் நினைக்கின்றேன். ஏன் இது நடைபெறுகிறது? இல்லை என எனக்கு தெரியவில்லை. வர்த்தகர் என்ற ரீதியில் உங்களுக்கு தெரியும். உலகின் பிரதான வர்த்தகர்கள் உலக வர்த்தக விவகாரங்கள் உங்களுக்கு தெரியும். எப்படி இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எவ்வாறான ஒரு தலைவர் எங்களுக்கு தேவை?
பாஸ்கரன் - யதார்த்தமான ஒரு தலைவர் தேவை. நன்மைக்காக ஒரு சமூகத்தையோ நாட்டையோ கட்சியையோ முன்னெடுத்து செல்லாத தலைமை தேவை தொலைநோக்கு பார்வையுடன் பயணம் செய்யக்கூடிய தலைவர் தேவை. இலங்கையில் ஏராளமான வளங்கள் உள்ளன.
வடக்கில் மில்லியன் கணக்கான பனை மரங்கள் காணப்படுகின்றன பல்வேறு உற்பத்திகளை செய்ய முடிகிறது. இனிமேல் நாம் எதனையும் உற்பத்தி செய்யவில்லை.
ஏன் தெரியுமா இந்த அரசியல் காரணமாக இந்த நிலைமை காணப்படுகின்றது.
சதுர - என்ன மாதிரியான அரசியல் உங்களுக்கு தேவை என்றால் கருப்பட்டி செய்யலாம் தேவையென்றால் நீங்கள் அவற்றை உற்பத்தி செய்யலாம் அல்லவா?
பாஸ்கரன் - சகோதரா கள்ளு எடுக்கக்கூடியவர்கள் மட்டுமே இங்கே கள்ளு எடுக்க முடியும். வேறு யாரும் போய் அதனை எடுத்தால் வெட்டி விடுவார்கள்.
அதற்கென்று ஒரு அமைப்பு உள்ளது. அந்த சங்கத்திற்குள் அரசியல் உண்டு. ஏனையவர்களால் பனை மரத்தில் கை வைக்க முடியாது. ஏதேனும் மில்லியன் கணக்கான பனை மரங்கள் காணப்படுகின்றன.
நினைத்துப் பாருங்கள் எவ்வாறான உற்பத்திகளை எம்மால் செய்ய முடியும் என சீனி உற்பத்தி செய்ய முடியும். மதுபானம் உற்பத்தி செய்ய முடியும்.
பனை ஓலைகளினால் பாய் பிண்ண முடியும் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் பல மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள முடியும்.
யார் இதைப் பற்றி யோசிக்கிறார்கள். யாராவது இதைப் பற்றி நினைக்கின்றார்கள்.
அதேபோன்று தேங்காய். இலங்கையில் பாரிய அளவில் தேங்காய் உற்பத்தி உண்டு. தேங்காய் சிரட்டை வகைகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்ய முடியும். தென்னை மட்டை உள்ளிட்ட பொருட்களிலிருந்து பல்வேறு உற்பத்திகளை செய்ய முடியும்.
பூஞ்செடிகளுக்கு போடக்கூடிய ஒரு பொருளாக பயன்படுத்த முடியும். இவ்வாறு எடுக்கக்கூடிய பொருட்களை விரயமாக குப்பையில் போட்டு எரிக்கின்றார்கள்.
எங்களுடைய கடல் வளம், எங்களுக்கு அழகான கடல் உண்டு. அதே போல் அதிகள அதிக அளவு உற்பத்திகளை செய்யக்கூடிய கடல் காணப்படுகின்றது.
இலங்கை கடல் உணவு வகைகளுக்கு நல்ல கேள்வி உண்டு.
உலக அளவில் இறால் உள்ளிட்ட அனேக கடல் உணவு வகைகளுக்கு நல்ல கிராக்கி காணப்படுகின்றது.
எனினும் நாம் எங்களுடைய வளங்களை அண்டை நாடுகள் அள்ளிச் செல்வதற்கு இடம் அளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் அந்த பொருட்களை எடுத்து ஏற்றுமதி செய்யலாம். எங்களது மொத்த தேசிய விருப்பத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
நீங்கள் கடல் உணவு உற்பத்தி ஒன்றை செய்தால் மற்றொருவர் அதனை தடுப்பார் அரசாங்கம் இதனை பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கும் நிறைய விடயங்களை மாற்றத்தை கொண்டு வரலாம் வருமானத்தில் ஈட்டக்கூடிய பல்வேறு விடயங்கள் உண்டு வருமானத்தை உருவாக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன.
வடக்கில் மா, மரம் முந்திரிகை மாதுளம், தெங்கு உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்க்க முடியும்.
100 ஏக்கர் இல்லை ஆயிரம் ஏக்கரில் செய்ய முடியும் உலகில் மிகச்சிறந்த அன்னாசி வகை இலங்கையில் விளைகின்றது.
எவ்வளவு அண்ணாசியை நாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றோம்? மாதுளம் பழத்தை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றோம்.
ஏன் எங்களினால் உற்பத்தி செய்து வெளிநாட்டு கேட்டது செய்ய முடியாது. யார் இதைப் பற்றி சிந்திக்கின்றார்கள்? இது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் அழுத்தம் செலுத்த வேண்டும். இத்தனை ஆயிரம் தென்னை மரங்கள் இருந்தால் அது நாட்டுக்கு போதும் அதற்கு மேல் அதிகமாக உள்ளவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று அரசாங்கம் திட்டங்களை வைக்க வேண்டும்.
முதலீடுகளை உரிய முறையில் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசாங்கத்தினால் இந்த மாதிரியான விடயங்களுக்கு எவ்வித உதவியும் வழங்கப்படுவதில்லை.
அரசியல் தீர்வு
புதியவர்கள் முதலீடு செய்ய வந்தால் அரசாங்கத்தினால் எவ்வித உதவியும் வழங்கப்படுவதில்லை. அரசாங்கம் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எனக்கு இது குறித்து அனுபவம் உண்டு.
நான் இந்த 150 ஏக்கர் காணியை எனது பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்தேன். இது அரசாங்கக் காணியோ அல்லது குத்தகைக்காணியோ அல்ல நான் அரசாங்கத்திடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை.
இது என்னுடைய சொந்த முதலீடு அரசாங்கம் இதுவரையில் இந்த இடத்திற்கு வந்து பார்த்து நீங்கள் இவ்வளவு முதலீடு செய்து இருக்கிறீர்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று இதுவரை கேட்டதில்லை.
இந்த பாதைகளை பார்த்தீர்களா இந்தப் பாதை இரண்டு தடவைகள் நானே செய்தேன். வரும் விருந்தினர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வரவேண்டும் என்பதற்காக நான் இந்த பாதையை நிர்மாணித்தேன்.
சுற்றுலா மையம் ஒன்று வந்தால் உடனடியாக அரசாங்கம் அதன் தரப்பிலிருந்து பாதைகளை அமைத்து நீர் வழங்கி போக்குவரத்து வசதிகள் தந்து அவ்வாறான உட்கட்டுமான வசதிகளை செய்திருக்க வேண்டும். அனைவரும் இணைந்து இந்த இதனை கட்டி எழுப்ப வேண்டும்.
ஒருவர் வெளிநாட்டில் இருந்து முதலீடு செய்தால் அரசாங்கம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதில் பயனில்லை.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் யோசிக்க கூடிய அரசியல்வாதிகள் வரவேண்டும் இந்த மாதிரி யோசிக்க கூடிய ஜனாதிபதி வரவேண்டும்.
சதுர - எவ்வாறான அரசியல் தீர்வுக்கு நீங்கள் விரும்புகின்றீர்கள்?
பாஸ்கரன் - இலங்கையில் தமிழ் தரப்புகளில் பல்வேறு அரசியல் காட்சிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கே உரிய நிகழ்ச்சி நேரலை கொண்டிருக்கின்றன.
ஒரு கட்சி 13ஆம் திருத்த சட்டம் என்று கூறும் மற்றும் ஒரு கட்சியை தமிழீழம் என்று கூறும் மற்றும் ஒரு கட்சி ஒரே நாட்டில் இரண்டு இனங்கள் என்று கூறும் பல்வேறு கட்சிகள், பல்வேறு கருத்துக்களை வெளியிடும் நான் அந்த கோணத்தில் இருந்து பார்க்கவில்லை.
எனக்கு இந்த நாட்டில் சிங்கள குடிமகன் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து சுதந்திரத்தையும் தமிழ் குடிமகனும் அனுபவிக்க வேண்டும்.
அதுவே சம உரிமை ஆகும் இதற்கு பல நாடுகள் முன்னுதாரணமாக சொல்ல முடியும்.
சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மற்றும் டச் மொழி பேசுகின்றனர். கனடாவில் இங்கிலாந்தில் இவ்வாறான மொழி பேசுபவர்கள் இருக்கின்றனர். அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அனைவரையும் ஒரே விதமாக பார்க்கக்கூடிய அரசியல் தீர்வு திட்டமே தேவை அரசியல் தீர்வு என்று வரும் போது அது 10 வருடத்திற்கான அல்லது 20 வருடத்திற்கான தீர்வு திட்டமாக இருக்கக் கூடாது.
அது ஒரு நிரந்தர தீர்வு திட்டமாக இருக்க வேண்டும். ஒரு தீர்வு வந்தால் அந்த தீர்வு இலங்கை தீவின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமைய வேண்டும்.
அந்த தீர்வு திட்டம் எவ்வாறு இருக்க வேண்டுமானால் மற்ற நாடுகளுக்கு சென்று எவ்வாறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை பார்த்து வேறொரு நாட்டில் இருப்பது போன்று ஸ்திரமான ஓர் தீர்வு திட்டம் கொண்டு வந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை.
சதுர - நீங்கள் போலந்திலா இருக்கின்றீர்கள்?
பாஸ்கரன் - நான் இங்கிருந்து முதலாவதாக நெதர்லாந்துக்கு சென்றேன். அங்கே வியாபாரங்களை ஆரம்பித்து குடும்பமாக அங்கு வசித்த காரணத்தினால் நான் அங்கு தங்குவதற்கு தீர்மானித்தேன்.
அந்த நாடு நல்ல நாடு என்பதால் வெளிநாட்டவர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறை கொண்டு அந்த நாட்டுப் பிரஜைகள் நடத்துவதில்லை அவர்கள் அனைவரையும் சமமாக மதிக்கின்றார்கள்.
அங்கே வெளிநாட்டவர் ஒரு பெரிய வியாபாரத்தை ஆரம்பித்தாலும் விதவிதமான பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை. வரியை செலுத்தினால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
சரியான முறையில் இருந்து கொண்டால் எந்த எந்தவிதமான பிரச்சினைகளும் வருவதில்லை. டச்சு மக்களை எனக்கு பிடிக்கும். அந்த நாடு எனக்கு பிடிக்கும்.
அவர்களுடைய உட்கட்டுமான வசதி அவர்களது பொருளாதார வளர்ச்சி ஒரு ஸ்திரமான தன்மையில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துச் செல்லும் போக்கினை காட்டுகின்றது.
எனினும் என்னுடைய ஆசை இங்கு இந்த நாட்டில் வாழ்வதையே நான் விரும்புகின்றேன்.
சதுர - உங்களது நாட்டிலா? எமது நாட்டிலா?
பாஸ்கரன் - எனது பிள்ளைகள் திருமணம் முடித்தால் அவர்கள் இங்கு வர மாட்டார்கள் எனக்கு எங்க இருக்கவே விருப்பம் நான் இங்கு பல்வேறு விடயங்களை செய்ய விரும்புகிறேன்.
நான் மாற்றங்களை கொண்டு வர விரும்புகின்றேன்.
சதுர - இவ்வாறான ஒரு நிகழ்ச்சி எங்களது விடுமுறை நாட்களில் நாம் இந்த நிகழ்ச்சியை செய்கின்றோம். ஏனென்றால் இது மக்களுக்கு முக்கியமானது என நான் கருதுகின்றேன்.
இவ்வாறான அபிவிருத்தி நாட்டிற்கு தேவை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
இலவசமாகவே இந்த மாதிரியான தொழில் முயற்சிகளை பிரச்சாரம் செய்து அவர்களுக்கு மேலும் ஊக்குவிப்பதே எங்களுடைய நிறுவனத்தின் நோக்கமாகும்.