இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் பல மோசடிகள்: வெளிவந்த அதிர்ச்சிகள்
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பணம் பரிமாறப்பட்டுள்ளமை தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளன.
தேசிய ஐக்கிய முன்னணியில் உறுப்பினர் நுவன் ஹெட்டியாரச்சி யூடியூப் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் பேசுகையில்,
“2012ஆம் ஆண்டு கொடக்கவெல தொகுதியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நான் தலைவர் பதவிக்கு விருப்பமின்மையால் நான் அறிந்த ஒருவரை நியமித்தேன்.
அரசாங்கம் மேற்கொள்ளும் அழுத்தம்
அவருக்கு ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தானகே ரூ.50,000 பணம் கொடுத்துத் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு குறிப்பிட்டார். அச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி செயற்பாட்டாளராக இருந்த அதிபர் ஒருவர் தேர்தல் செலவுக்காக எனக்கு ரூ.500 கொடுத்தார்.
நான் தனியாகக் கஷ்டப்பட்டு 80 வாக்குகள் பெற்றேன். அவர் 90 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது ஜே.வி.பிக்கு இவ்வாறான தேர்தல்களில் எந்தவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது.
இளைஞர் நாடாளுமன்றம், அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலில் நுழைவதற்கான ஒரு பாலமாகவே அமைக்கப்பட்டதாகும். அன்று அரசியல் பலம் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்களே இளைஞர் நாடாளுமன்றங்களில் தெரிவு செய்யப்பட்டனர்.
இளைஞர் சங்கங்களின் நிர்வாக தேர்வுகள் அரசியல் வாதிகளின் வீட்டில் முடிவெடுக்கப்பட்ட பின்னர் ஒரு நாடகமாகவே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் இளைஞர் கழகங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் அழுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



