காட்டு யானை கூட்டத்தினால் அதிகாலையில் நேர்ந்த அனர்த்தம்
கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச்சென்ற தொடருந்து காட்டு யானை கூட்டத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய மற்றும் ஹிங்குராங்கொட தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகள் மோதியதில் மூன்று எரிபொருள் தாங்கிகள் மற்றும் ஏனைய பெட்டிகளுடன் இயந்திரம் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவைகள் முற்றாக நிறுத்தம்
இந்த விபத்தில் காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எரிபொருள் எண்ணெய் தாங்கிகள் கவிழ்ந்ததில் தண்டவாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் தொடருந்து சேவைகள் முற்றாக நிறுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 20 மணி நேரம் முன்

முத்து போட்ட ஸ்கெட்ச்.. சீதாவிடம் வசமாக சிக்கிய அருண்! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
