குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல்: அரசாங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் அறிவுரை
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள உடன்படிக்கை காரணமாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் அறிவித்த அளவுக்கு வரிகளை குறைக்க முடியாது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வரிகளை குறைக்க முடியுமானால் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை வழங்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் விலையை 190 ஆக குறைக்க முடியும்
மேலும், வரிகளை குறைப்பதன் மூலம் எரிபொருள் விலையை 190 ஆக குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் தற்போது நிலவும் நிலவரப்படி எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் எரிபொருள் விலையை குறைக்க முடியும் எனவும், எரிபொருள் விலை சூத்திரத்தை பின்பற்றினால் மேலும் எரிபொருள் சலுகைகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கணிசமான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |