உக்ரைனிய நகரில் நரக வேதனையளிக்கும் போர்ச்சண்டை
உக்ரைனின் செவேரோடானட்ஸ்க் (Severodonetsk) நகரத்தில் ரஷ்யப் படையினரின் போர் நடவடிக்கைகள் நரக வேதனை அளிப்பதாக லுஹான்ஸ்க் வட்டார ஆளுநர் தெரிவித்துள்ளார்.
செவேரோடானட்ஸ்க்கில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் பல வாரங்களாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதைத் திரு செர்கி கேய்டாய் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
உக்ரேனியப் படையினர் தொடர்ந்து அங்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும், எவ்வாறாயினும் முடிந்த அளவுக்கு அதே நிலையில் இருக்க முயல்வர் என்றும் கேய்டாய் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் ஆஸொட் ரசாயன ஆலையில் தஞ்சம்
அந்நகரில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆஸொட் ரசாயன ஆலையில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் சண்டை தீவிரமடைந்திருப்பதால் அவர்களால் வெளியேற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சண்டை நிறுத்தம் நடப்பில் இருந்தால்தான் அவர்களை வெளியேற்றமுடியும் என்று கேய்டாய் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து உயர் அதிகாரிகளிடையே இணக்கம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.