கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் : மக்கள் அதிருப்தி
கொழும்பு கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் விஜயம் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன் அறிவித்தல் இன்றி பாதைகள் மூடப்பட்டதற்கு மக்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு தர்மசங்கடமான நிலை
வாகன நெரிசலுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் வாகனத்தின் ஹோர்ன்களை ஒலிக்கச் செய்து சாரதிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட காலி வீதியில் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேச நாடான ஈரானிய ஜனாதிபதி இலங்கை விஜயத்தின் போது சாரதிகளின் இந்த எதிர்ப்பு, அரசாங்கத்திற்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan