நுவரெலியாவில் இடியுடன் கூடிய கனமழை!
நுவரெலியாவில் இன்று(03.04.2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, மெரயா ,திஸ்பனை போன்று பகுதிகளில் கடுமையாக பெய்த கனமழையால் பிரதான வீதிகளி மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும், இதன் காரணமாக ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் நேற்று(02.04.2026) பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதில், குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
நுவரெலியாவில் தொடர்ந்து பல பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுவரெலியாவில் அதிக வெப்பமான காலநிலையால் குடிநீர் இன்றி பல்வேறு பாதிப்புக்கள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
