மத்திய மலை நாட்டில் கனமழை: வாகனச் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை.
மத்திய மலை நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹாவா-எலிய, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்ல குருக்கு வீதி மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் இன்று (25.9.2026) அதிகாலை முதல் நிலவும் இந்த மாறுபட்ட காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகளில் எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதனால் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனங்களின் வேகத்தைக் குறைத்துச் செலுத்த வேண்டும் எனவும் ,முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டுப் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன் செல்லும் வாகனங்களுக்கும் தமக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வாகனப் போக்குவரத்து நிலவும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி ஆகிய பிரதான வீதிகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மண் திட்டுகளுக்கு அருகாமை யில் வசிப்ப வர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.