ஹட்டனில் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.
ஹட்டன் பகுதியில் இன்று(12.5.2026) சுமார் 2.00 மணியளவில் பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகின.
கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் வீதியில் நடந்து செல்ல முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! கைபேசியில் கடவுச்சொல்லாக பதியப்பட்ட முகம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கடும் பனி மூட்டம்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் வட்டவளை தியகலை கர்லினா,கினிகத்தேனை பிட்டவல ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம,கொட்டகலை,சென்கிளையார்,தலவாக்கலை ரதல்ல நானுஓயா ஆகிய பகுதிகளில் மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் டிட்வா சூறாவளியில் ஏற்பட்ட மண்சரிவுகள் தற்போது தொடர் மழை காரணமாக மீண்டும் சரிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலை வேளையில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக விவசாய தொழில் ஈடுபடுபவர்களும், அன்றாட கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சரியான தீர்வு
ஹட்டன் பகுதியில் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையின் காரணமாக பொலித்தீன்கள் மற்றும் பிலாஸ்ரிக் போத்தல்கள் கால்வாய்களில் அடைத்து மழையின் போது வீதியில் மழைநீர் வழிந்தோடுவதாகவும் ஹட்டன் பகுதியில் காணப்படும் பல குறுக்கு வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளை தெளிவு படுத்திய போதிலும் சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam