பேரிடருக்கு மத்தியில் மாணவி மற்றும் தாதியின் நெகிழ்ச்சியான செயல்
இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் 22 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளிலுள்ள வீடுகள் உடைந்துள்ளதுடன், பலரின் உடமைகள் இல்லாமல் போயுள்ளன.
மாணவியின் செயற்பாடு
இந்நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

மழை வெள்ளத்தினால் நனைந்து போன தனது பாடசாலை புத்தகங்களை வெயிலில் காய வைத்து கற்றல் நடவடிக்கைக்கு தயாராகும் காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எத்தனை பேரிடர் வந்திடுனும் கல்வி என்பது முக்கியத்துவம் என்பதை வெளிப்படுத்தும் செயல் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
தாதியின் செயல்
அதேவேளை தாய்-சேய் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் நனைந்த குழந்தைகளின் மருத்துவ அட்டைகள், கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ அறிக்கைகளை, தாதி ஒருவர் கவனமாக உலர வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கடினமான தருணங்களில் இவ்வாறான ஊழியர்களின் அர்ப்பணிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.