பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளைச் சமாளிக்க இலங்கை மத்திய வங்கி தன்னிடம் உள்ள வளத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(02.12.2025) நடைபெற்ற 2025 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சியை மீளமைத்தல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சூறாவளி மற்றும் அதன் பின்விளைவுகள் போன்ற காலநிலை தொடர்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீள கட்டி எழுப்ப முடியும்.
முந்தைய நெருக்கடிகளை விட எதிர்பாராத அதிர்ச்சிகளை உள்வாங்க இலங்கை சிறந்த நிலையில் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் எதிர்பாராத வெளிப்புற அதிர்ச்சியை எதிர்கொண்டோம். எனவே எங்களிடம் திட்டங்கள் இருந்தன. காலநிலை தொடர்பான அதிர்ச்சிகள் என்பது நாம் முன்பு அனுபவித்த உள் நிகழ்வுகள்.
அவற்றைக் கையாள்வதற்கான போதுமான பலத்தை கொண்டிருக்கிறது. மத்திய வங்கி சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.
அரசாங்கத்தின் தரப்பில், குறுகிய கால நிதி நிவாரணத்தை நிர்வகிக்க முடியும். வெளிப்புறமாக, நாங்கள் முன்பை விட சிறந்த நிலையில் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.