வட்டி அற்ற மாணவர் கடன் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்களை கோரும் கால எல்லையானது 2025.11.01 முதல் 2025.11.30 வரை இருந்த நிலையில், மேலும், நீடிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டத்திற்காக விண்ணப்பித்தல்
நாட்டில் நிலவிய அனர்த்த நிலை காரணமாக இந்த கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தமது முதலாவது அல்லது இரண்டாவது தடவையாக தோற்றிய மாணவர்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டிலும் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்திற்காக விண்ணப்பித்தலை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து இணைய வழியில் (Online) மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam