காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
அரகலய என்ற காலிமுகத்திடல் (Galle Face) போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மிரிஹானவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தம்மை அநியாயமாக கைது செய்ததன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை உரிமைகள்
நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததை அடுத்து இந்த மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், இதே சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வேறு நான்கு மனுக்களை நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |