ஊரடங்கு தளர்வின் பின்னர் மோசமாகி செல்லும் சுகாதார வழிகாட்டுதல்கள்
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பின்னர் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் மோசமாகி செல்வது கவனிக்கப்படுகின்றது என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) இது தொடர்பில் கருத்துரைக்கும் போது,
கடந்த இரண்டு நாட்களாக மக்களின் நடத்தை முற்றிலும் திருப்தியற்றதாகவும், மிகவும் மோசமானதாகவும் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை. அத்துடன் சில இடங்களில் முன்னெச்சரிக்கை சுகாதார வசதிகள் திறம்பட பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் மக்களின் பொறுப்பற்ற நடத்தையை நினைவூட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவே ஒரு பேரழிவு நிலைமைக்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்.மேலும் எந்தவொரு கோவிட் கொத்தணியும் தோன்றுவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
