இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் புதிய பணிப்பாளர் ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரி! முஜிபுரின் சர்ச்சை கருத்து
இலஞ்ச ஒழிப்பு ஆணையக் குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமான மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரியாக பணியாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26.09.2025)கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
குறித்த கருத்து தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் சிறு குழப்பநிலையும் ஏற்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியினர்
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,இது ஒரு தீர்க்கமான பிரச்சினை என்று சுட்டிக்காட்டியபோது, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அது பொருத்தமற்றது என்று கூறி பேசுவதை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், முஜிபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் என்ன தேடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று ஒரு பாட்டையும் ஞாபகப்படுத்தியிருந்தார்.
“ஐக்கிய மக்கள் சக்திக்கு என்ன ஆயிற்று? நீங்கள் ஒரு காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் கட்சியாக இருந்தீர்கள், இல்லையா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஐ.தே.க. உறுப்பினருமான நந்தன குணதிலக, ரங்க திசாநாயக்க அன்று தனக்கு கீழ் ஜே.வி.பி.யின் சட்ட அதிகாரியாக பணியாற்றியதாகக் தெரிவித்ததை எம்.பி சுட்டிக்காட்டினார்.
அவரது நியமனம் நடுநிலையாகக் கருதப்படுமா? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
