ஓய்வு பெறும் பறக்கும் சவப்பெட்டி! 60 ஆண்டுகளுக்குப் பின் MIG -21- ஐ தரையிறக்கிய இந்தியா
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இந்திய விமானப்படையின் ஒரு சகாப்த போர் விமானம் தற்போது அதன் முடிவு நிலையை அடைந்துள்ளது.
மிகோயன்-குரேவிச் மிக்-21என்ற குறித்த விமானம், பாகிஸ்தானுடனான நான்கு ஆயுத மோதல்களின் நாயகனாகத் திகழ்ந்த, மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்திய போர் விமானம் அதன் கடைசிப் பயணத்தை இன்று(26.09.2025) மேற்கொண்டது,
பல ஆண்டுகளுக்கு முன்பே புதிய போட்டியாளர்களால் வழக்கற்றுப் போயிருக்க வேண்டிய சோவியத் சகாப்த போர் விமானமான மிக்-21 இன் மரபு, இந்திய விமானப்படைக்கு ஒத்ததாக மாறிய பின்னணியில் பல தசாப்தங்களாக தாக்குதல், பாதுகாப்பு மற்றும் உளவுப் பணிகளைச் செய்து வருகிறது.
இந்திய விமானப்படையில் மிக்-21
குறித்த விமானங்கள் இறுதியாக, இன்று பகல் 12.05 மணிக்கு “ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங்” ('பாதல் 3' என்ற அழைப்பு அடையாளம்) தலைமையிலான ஆறு பைசன் வகை விமானங்கள் இறுதியாக பறந்துள்ளன.
1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதல் மிக்-21 சேர்க்கப்பட்டது. அமெரிக்காவின் U-2 போன்ற உளவு விமானங்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட உயர் உயர இடைமறிப்பான் என்ற இந்திய விமானப்படையின் கோரிக்கையை பூர்த்தி செய்ய 13 விமானங்கள் கொண்ட ஒரு தொகுதி விமானம் இங்கு பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல உயர் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியாவுக்காக 1,200 க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் விமானப்படையின் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளன.
மேலும் 1965 பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவின் அனைத்து மோதல்களிலும் பல்வேறு பாத்திரங்களில் பணியாற்றியுள்ளது.
இருப்பினும், 2000களின் முற்பகுதியில் தொடங்கி, இந்த போர் விமானம் அதன் அதிக விபத்து விகிதத்திற்காக நன்கு அறியப்பட்டது.
பாதுகாப்பு உறவு
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது, அது ஒரு வலிமையான பல்துறை போர் விமானமாக MIG -21 மாறியது.
இருப்பினும் 1965 போரில் அது இன்னும் புதியதாகவும் முக்கியமாக இடைமறிக்கும் விமானமாகவும் இது மாறியிருந்தது.
மிக்-21 ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளையும் வடிவமைத்து, அதன் சொந்த விண்வெளித் துறையைத் தொடங்க உதவியது.
இவ்வாறு போற்றுதலுக்கு உரியதாக இருந்த இந்த வகை விமானம், பிற்காலத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.
மேலும், தொடர்ச்சியான கொடிய விபத்துகளால் பறக்கும் சவப்பெட்டி என்ற மோசமான பெயரையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
