திருகோணமலை - கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்துள்ளார்.
கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் வெள்ள நீர்
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
