ஈராக் வைத்தியசாலையில் தீ விபத்து: பரிதாபமாக பலியான குழந்தைகள்
ஈராக்கின் தெற்கு பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு வைத்தியசாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்து நேற்று (08.1.2024) மாலை திவானியா நகரில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அலட்சியமாக இருந்த வைத்தியசாலை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஈராக் பிரதமர் உத்தரவு
இவ்விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வைத்தியசாலையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 150 நோயாளிகள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
