உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் - தினேஸ் குணவர்தன
உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமேன அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் காரணமாக காலஞ்சென்ற காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக முறையில் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அனைவரும் தலை சாய்க்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் மரபுகளுக்கு எதிர்க்கட்சியின் இளம் தலைவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்தை மதிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 22 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
