ஹட்டன் பேருந்து விபத்து: சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஹட்டன் (Hatton) பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதியை ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர், ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்,வளைந்து செல்லும் வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த விபத்தில் சாரதி, மற்றும் பேருந்து உதவியாளர் உட்பட 53 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும், கண்டியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவரும், மேலும், பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
அதேவேளை, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் விபத்தின் போது பதிவான காணொளி வெளியாகியிருந்தது.
முன்னதாக இந்த காணொளி அழிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அக்காணொளி வெளியாகியிருந்த நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |