லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது - 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த 'கள்' லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
மழையுடனான காலநிலை
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடைபெறும்போது வட்டவளை பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியுள்ளது.
எனவே, மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி
சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.


முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
