பிரதமர் ஹரிணி தாக்கல் செய்த அவதூறு வழக்கு
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்த அவதூறு வழக்கு, டிசம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தலதா பெரஹரா நிறுத்தப்படும் என்று அத்தநாயக்க தெரிவித்த கருத்துக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், எங்கள் அரசாங்கம் நேர்மையற்றது என்று எதிர்க்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
பரப்பப்படும் பொய்கள்
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. உண்மையில் யார் பொய்களைப் பரப்புகிறார்கள்? தலதா பெரஹரா நிறுத்தப்படும் என்ற தவறான பரப்புரை காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த கருத்து பொய்யானது என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம் - பெரஹரா வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிரூபிக்க எதுவும் இல்லை என்றார்.
இன்று, பிரதிவாதிகள் தங்கள் பதில்களை தாக்கல் செய்த போதிலும், அவர்கள் உண்மையான கேள்விக்கு பதிலளிக்கவில்லை. திஸ்ஸ அத்தநாயக்கவின் பதில் பிரச்சினையைத் தவிர்ப்பதாகத் தெரிகிறது," என்றும் அவர் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |