இந்தியாவில் ஜெய்சங்கரை சந்தித்த ஹரிணி.. மோடியுடனும் சந்திப்பு
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்புடன் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை நேற்று தொடங்கினார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜெய்சங்கர், இன்று காலை புதுடில்லியில் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தமையில் மகிழ்ச்சி அடைகின்றார் எனக் கூறினார்.
முக்கிய உரை
"இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்." - என்று அவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் மேலும் கூறினார்.
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை18 ஆம் திகதி வரை இந்தியாவில் இருப்பார். அப்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார்.
நாளை நடைபெறவுள்ள என்.டி.ரி.வி. உலக உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் அவர் முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
