ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் ஹரிணியின் வலுவான கலந்துரையாடல்
ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச ஒத்துழைப்பு ஆணையர் ஜோசப் சிகேலாவுடன் (Jozef Síkela) இருதரப்பு கலந்துரையாடல்களில் இணைந்த பிரதமர் ஹரிணி, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து கவனம் செலுத்தினார்.
சர்வதேச தலைவர்களுடனான கலந்துரையாடல்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் 56 ஆவது வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதமர் ர் ஹரிணி அமரசூரிய, உலக பொருளாதார மன்றத்தின் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
WEF காங்கிரஸ் மையத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மசாடோ காண்டாவை (Masato Kanda) சந்தித்தார்.
இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தற்போதைய உறவையும் எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டது.

Menzies மென்ஸீஸ் ஏர்லைன்ஸ் தலைவர் ஹசன் எல் ஹூரியுடன் (Hassan El Houry) பிரதமர் விமானப் போக்குவரத்து விடயங்களை விவாதித்தார்.
உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து, டாவோஸின் பிஸ் புயினில் (Davos, Piz Buin Euronews Hub) உள்ள யூரோநியூஸ் ஹப்பில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா மன்றத்தில் உயர்மட்ட உரையாடலிலும் பிரதமர் பங்கேற்றார்.


