அமெரிக்க ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு! நடுவானில் ஏற்பட்ட சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழினுட்பகோளாறு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகையிலிருந்து (Air Force One ) விமானத்தில் புறப்பட்ட போது சிறிது நேரத்திலேயே மின் சிக்கலை சந்தித்துள்ளது.
விமானப்படை தளத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம்
இதன் காரணமாக விமானம் செயிண்ட் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், ட்ரம்ப் வேறு விமானத்தில் சுவிட்சர்லாந்திற்குச் செல்வார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் இன்று டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்ற உள்ளதுடன்,மேலும் நாளை டாவோஸில் காசா பகுதிக்கான அமைதி கவுன்சில் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri