இலங்கையில் தேடப்படும் ஆபத்தான நபர் விடுவிப்பு : டுபாயில் பாரிய விருந்து கொண்டாட்டம்
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார என்ற கொண்டா ரஞ்சியை அந்நாட்டு பொலிஸார் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருந்து சட்டத்தரணிகள் குழு, சந்தேக நபரை விடுவிப்பதற்காக டுபாய் சென்றுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கொண்டா ரஞ்சி இதற்காக சுமார் 250 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடையவர்
சந்தேக நபர் விடுவிக்கப்பட்ட பின்னர் பாரிய விருந்து வைக்கப்பட்டதுடன் அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கொண்டா ரஞ்சி சமீபத்தில் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.