பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : மோசமடையும் காற்றின் தரம்
பல்வேறு காரணிகளால் இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் இன்று(21.01.2026) காலை ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை, பொலன்னறுவை, அனுராதபுரம், வவுனியா, புத்தளம் மற்றும் காலி ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) இன்று காலை ஆரோக்கியமற்ற நிலைக்குக் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்
எனவே, இவற்றில் வசிப்பவர்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும், உணர்திறன் உள்ளவர்கள் மிகவும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, உணர்திறன் மிக்க நபர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri