ஹண்டாவைரஸ் பாதிப்பு: ஸ்பெயின் தீவில் தரையிறக்கப்பட்ட ஹொண்டியஸ் கப்பல் பயணிகள்
ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்றினால் பாதிக்கப்பட்ட 'எம்வி ஹொண்டியஸ்' என்ற சொகுசு கப்பல், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் இருந்த பயணிகளை வெளியேற்றும் பணிகளை ஸ்பெயின் அரசு தற்போது தொடங்கியுள்ளது. நெதர்லாந்து நாட்டு கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் பரவிய தொற்றினால், இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹண்டாவைரஸ்
மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கப்பலில் இருந்த அனைத்து பயணிகளும் "அதிக ஆபத்துள்ள தொடர்புகள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
துறைமுகத்தில் இறக்கப்பட்ட பயணிகளில், முதலில் ஸ்பெயின் நாட்டினர் இராணுவ பேருந்துகள் மூலம் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மாட்ரிட் நகரில் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
மற்றொரு கொவிட் அல்ல
அவர்களைத் தொடர்ந்து நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பிற நாட்டு பயணிகளும் அந்தந்த நாடுகளால் அனுப்பப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் நேரில் ஆய்வு செய்து, "இது மற்றொரு கொவிட் அல்ல" என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டாவைரஸ், மனிதர்களிடையே பரவுவது மிகவும் அரிதானது என்றும், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
30 ஊழியர்களுடன் இந்த கப்பல் இறுதியாக நெதர்லாந்து சென்றடையும், அங்கு முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam