மும்பையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்..
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் நடந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்
மும்பை இந்தியன்ஸ்
அதன்படி மும்பை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்கம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் திலக் வர்மா, நமன் திர் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

திலக் வர்மா அரைசதம் அடித்து 57 ஓட்டங்களும், நமன் திர் 47 ஓட்டங்களும், எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தொடர்ந்து பெங்களூரு அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் 27 ஓட்டங்களிலும், கோலி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அதிக அளவாக குருணல் பாண்ட்யா அரை சதம் (73 ஓட்டங்கள்) குவித்தார். ஜித்தேஷ் சர்மா 18, தேவ்தத் பதிக்கல் 12 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஷெப்பர்டு 4 ஓட்டங்களில் வெளியேறினார். புவனேஸ்வர் குமார் 7 ஓட்டங்களும், ரஷீக் சலாம் தர் 3 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை அணியில் கார்பின் 4 விக்கெட்டுகள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இறுதிஓவரில், மும்பையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
மேலும் புள்ளிப்பட்டியலிலும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலிடத்திற்கு முன்னேறியது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan