ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கும் அபாயம்
ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
ஈரானின் பாதுகாப்பு தயார்நிலை குறித்துப் பேசிய அவர்கள், இனி பொறுமை காக்கும் காலம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கடும் எச்சரிக்கை
ஈரானின் நிலப்பகுதிகள் அல்லது எண்ணெய் கப்பல்கள் என அந்நாட்டின் நலன்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிடும் எந்தவொரு நாட்டுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எதிரி நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், புதிய ஆயுதங்கள், நவீன போர் முறைகள் மற்றும் புதிய போர்க்களங்கள் மூலம் அவர்களுக்குப் பெரும் 'அதிர்ச்சி' காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவைப் பின்பற்றி ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நாடுகள், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தங்கள் சரக்குகளைக் கொண்டு செல்வதில் கடும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan