இலங்கையை அவுஸ்திரேலியாவாக மாற்றுவோம்..! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதி

Sunil Handunnetti Australia Economy of Sri Lanka
By Shadhu Shanker Aug 17, 2026 06:46 AM GMT
Report

சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னில் நடைபெற்ற Sri Lankan Entrepreneurs’ Night 2026 நிகழ்வில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான வாழ்க்கை

“இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள். நாம் பேசும் மொழி வேறுபட்டாலும், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். கல்வி, தொழில் அல்லது சுதந்திரமான வாழ்க்கைக்காக நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கலாம்.

இலங்கையை அவுஸ்திரேலியாவாக மாற்றுவோம்..! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதி | Handunneththi Vows Transform Sri Lanka Australia

உங்களுடனும் எங்களுக்கு வாக்களித்த 18 மில்லியன் மக்களுடனும் இணைந்து, குறுகிய காலத்திற்குள் இலங்கையை அவுஸ்திரேலியாவைப் போன்ற நாடாக மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தலைமுறையினர் சுதந்திரமாக கல்வி கற்கவும் வாழவும், அனைவருக்கும் சமமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வகையிலும், மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சவால்

இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வலுவான உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அவுஸ்திரேலியாவாக மாற்றுவோம்..! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதி | Handunneththi Vows Transform Sri Lanka Australia

ஊழலற்ற, முதலீட்டுக்கு உகந்த மற்றும் வெளிப்படையான புதிய பொருளாதார சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை தொழில் முனைவோர் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா–இலங்கை வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மெல்பேர்னில் உள்ள The Grandeur மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையின் மெல்பேர்ன் கொன்சல் ஜெனரல் பிரதீபா சாரம், அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

2,000 ரூபாவினால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!

2,000 ரூபாவினால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US