உயிர்த்த ஞாயிறு விசாரனையால் பதறும் ராஜபக்சர்கள் - சுரேஷ் சலே தொடர்பில் ஹந்துன்நெத்தி விமர்சனம்

Colombo Sajith Premadasa Easter Attack Sri Lanka Rajapaksa Family Suresh Salley
By Rakesh Jun 22, 2026 01:42 PM GMT
Report

சிறைக்குச் செல்ல வேண்டிய தரப்பினரே தற்போதைய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(21.06.2026) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்! காதலன் மற்றும் மனைவி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்! காதலன் மற்றும் மனைவி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஊழல்வாதிகளைப் பாதுகாத்தல்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 2024 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜபக்சக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தற்போதைய அரசுக்கு எதிராகத் திட்டமிட்ட சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினருமே மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தார்கள்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால் மகிந்த ராஜபக்சவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார்.

உயிர்த்த ஞாயிறு விசாரனையால் பதறும் ராஜபக்சர்கள் - சுரேஷ் சலே தொடர்பில் ஹந்துன்நெத்தி விமர்சனம் | Handunnethi Easter Suspects Fear Ongoing Trial

அதேபோன்று மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்ரமசிங்கவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார்.

இதுவரை காலமும் இந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நாட்டை ஆண்டனர். எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் இவர்களின் பரம்பரை ஆட்சி முறைமை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் - அரசிற்கு முக்கிய கோரிக்கை

எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் - அரசிற்கு முக்கிய கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்

கடந்த காலங்களில் தாங்கள் செய்த ஊழல்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள்.

அதன் காரணமாகவே, கடந்த காலங்களில் ஒருவரையொருவர் கடுமையாக மோதிக்கொண்டவர்கள் இன்று சுயநலத்துக்காக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள்.

அதேபோல், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தங்களின் பிரதான அரசியல் பிரசாரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

உயிர்த்த ஞாயிறு விசாரனையால் பதறும் ராஜபக்சர்கள் - சுரேஷ் சலே தொடர்பில் ஹந்துன்நெத்தி விமர்சனம் | Handunnethi Easter Suspects Fear Ongoing Trial

தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இதனைக் கண்டு மகிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது எந்தவித தடையுமின்றிச் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து, அதன் பின்னணியில் உள்ள படுகொலையாளிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

அதன் விளைவாகவே அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.

சுரேஷ் சலேவின் நலன்விரும்பிகள் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்பவர்கள், தாராளமாக அவருக்காக நீதிமன்றத்தை நாடிச் சட்டப்படியாக எதிர்கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவின் பாதயாத்திரை நேற்று மட்டகளப்பில்.. 14ஆம் திகதி வரை நீடிப்பு

கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவின் பாதயாத்திரை நேற்று மட்டகளப்பில்.. 14ஆம் திகதி வரை நீடிப்பு

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US