அம்பாறையில் விபரீத முடிவினால் உயிரிழந்த இளைஞரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் சாமி அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளது.
சடலம் கையளிப்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டின் சாமி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் 24 வயது மதிக்கத்தக்க நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை
விசாரணையில், தூக்கில் தொங்கிய போது ஏற்பட்ட மூச்சு திணரல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார் என்றும் காரைதீவு -12 பிரதான வீதியை சேர்ந்த ரவிந்திரன் மிதுசன் என்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர், காதல் விவகாரம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan