வவுனியாவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வீடு கையளிப்பு
வவுனியா மாவட்டத்திலுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு புதிய வீடொன்று சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவால் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து வாழும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வவுனியா - மாமயிலங்குளம் பகுதியில் கட்டப்பட்ட புதிய வீடொன்றே நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு படையின் நிதி மற்றும் தொழிலாளர் பங்களிப்புடன் புதிய வீட்டின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா சிவில் பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சூரிய அஸ்மடல மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் மூத்த தளபதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
