கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு(Photos)
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று(6) கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது சந்தேகநபரது உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைக்குண்டினை கைவிடப்பட்ட பகுதியிலிருந்து எடுத்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக கைக்குண்டை வைத்திருந்ததாகவும் விசாரணையில் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யபட்ட சந்தேகநபர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



