அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிதி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
வழக்கு தாக்கல்

ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது “நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தி மற்ற வெளிநாட்டு கடன் வழங்குநர்களை விட அதிக நலன் பெறுவதற்கான வெளிப்படையான முயற்சி” என தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
1 பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரத்தை, இலங்கை அரசாங்கம் செலுத்த தவறியதை காரணம் காட்டி கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸை தளமாக கொண்ட ஹமில்டன் ரிசர்வ் வங்கி இலங்கை அரசாங்கம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளது.
செலுத்த வேண்டிய தொகை

சர்வதேச இறையாண்மை பத்திரங்களை 5.875% வட்டியில் கடந்த 2022 ஜூலை 25 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் மீள செலுத்த வேண்டியிருந்தது.
இதேவேளை நீதிமன்ற ஆவணங்களின்படியும் ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களின்
விதிமுறைகளின்படியும் இலங்கை அரசாங்கமானது ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு மொத்தமாக 257,539,331.25 அமெரிக்க
டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதுடன் இது 250,190,000 டொலர் அசல் மற்றும்
7,349,331.25 டொலர் வட்டியை உள்ளடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam