ஹமில்டன் ரிசர்வ் வங்கி இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரம் (ISB) வைத்திருக்கும் ஹமில்டன் ரிசர்வ் வங்கி (HRB) இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நியூயார்க்கின் தெற்கு மாவட்ட ஐக்கிய மாகாணங்களின் மாவட்ட நீதிமன்றத்தால் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இது குறித்து நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட பொது பதிவுகளின் படி, ஹமில்டன் ரிசர்வ் வங்கி லிமிடெட் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கு விசாரணை நீதிபதி டெனிஸ் எல்.கோட் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஜூலை 15ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, இலங்கையின் சார்பாக சட்டத்தரணிகள் ரொபர்ட் ஹூக், ஜோன் அலெக்சாண்டர் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸின் பெஞ்சமின் பெரிங்கர் ஆகியோர் முன்னிலையாகியுள்ளார்.
ஹமில்டன் ரிசர்வ் வங்கியை Bleichmar Fonti & Auld LLP சட்ட நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இலங்கையின் மீதான குற்றச்சாட்டு
வெளிநாட்டு கடன் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை முடிவெடுத்திருந்தது.
இலங்கை, தமது சர்வதேச இறையாண்மை பத்திரத்தை செலுத்த தவறியதுடன், ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, ஜூன் 21ஆம் திகதி நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், ஹமில்டன் ரிசர்வ் வங்கி லிமிடெட் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் கோரிக்கை
இலங்கையினால் தமக்கு 257.5 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என மனுதாரர் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் முடிவால், 2023 ஏப்ரல் 18 காலாவதியாகும் இறையாண்மைக்கான 5.75 வீத வட்டி மற்றும் 2028 ஏப்ரல் 18 காலாவதியாகும் இறையாண்மைக்கான 6.75 வீத வட்டி என்பவை ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு கிடைக்காமல் போயுள்ளது என ஹமில்டன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், அதனை பெற்று தர வேண்டும் எனவும் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, ஜூலை 25ஆம் திகதி மொத்த அசல் தொகையில் 25 வீதத்திற்கும் அதிகமான தொகையான $250,190,000 முதன்மை தொகையுடன், தாம் இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பதாக ஹமில்டன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்! புலிகள் உங்களை விட சிறந்தவர்கள் - காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் |